இந்த இரண்டு சுதந்திரமான அமைப்புகளும் கற்கைநெறிகளை பயில்வோர் பாடத்திட்டத்தை தீர்மானித்தல் பெறுபேறுகளை உறுதிப்படுத்துதல் மற்றும் ஒழுங்கு தொடர்பான விடயங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பாக இருந்தன.
SPS என்பது பொது முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கற்கை நெறிக்கு உரிய கேந்திரமாகும். இது தரமான கல்வியையும் தொழில்சார் அபிவிருத்தி கற்கை நெறிக்கும் பல்தரப்பட்ட பங்குபற்றுவோரை பயிற்றுவிக்க கடமைப்பட்டுள்ளது. இந்த பட்டப்பின் படிப்பை பொது மக்கள், தனிப்பட்டோர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளை சார்ந்தவர்களை பின்பற்ற முடியும். இந்த கற்கை நெறியை பங்குபற்றுவோரின் அறிவையும் திறனையும் மேம்படுத்தி அவர்களை தொழில்சார் நிர்வாகிகளாக மாறுவதற்கு உதவும் வகையில் இந்த நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவர்களது தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திறன்களை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளை SPS வழங்குகிறது.
தனித்தன்மையுடன் கூடிய (MPM) திட்டம் பங்குபற்றுனர்கள் முதுமானி பட்டம் பெறும் வகையில் அவர்குள் மதிப்பை உயர்த்துகிறது. அத்துடன் பல்வேறு முகாமைத்துவ மட்டங்களில் நம்பிக்கையுடன் செயலாற்றும் திறன்களையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.
முகாமைத்தவ செயற்திறன்களை அபிவிருத்தி செய்யும்போது அறிவையும் திறன்களையும் இத்திட்டம் விஸ்தரிப்பதுடன் உலகளாவிய ரீதியில் பங்குபற்றுனர்களின் ஆற்றல்களை தெளிவாக்கும் அதேவேளை வலுப்படுத்தும் வாய்பையும் வழங்குகிறது.
கீழ்க்காணும் வகையில் அவை உள்ளடங்குகின்றன.
இந்த வகையில் (MPM) நெறியானது பலதரப்பட்ட மாற்றப்படக்கூடிய அறிவு மற்றும் பல்வேறுபட்ட ஒழுங்கு முறை செயல்திறன்களை மேம்படுத்துவதை மையப்படுத்தியுள்ளது. அவையாவன
பங்குபற்றுனர்களின் தொழில்சார் தேவைகள் மற்றும் அக்கறைகளை திருப்திப்படுத்தும் வகையில் கீழ்க்காணும் விசேட உள்ளீட்டுத் தொடரை பயிலும் வாய்ப்பை வழங்குகிறது. (MPM) கற்கை நெறியின் சிறப்பியல்பாகும்.
எவ்வாறெனினும் ஒரு உள்ளீட்டுத்தொடரை பின்பற்ற குறைந்தபட்சம் 20 பங்குபற்றுனர்களாவது இல்லாதிருந்தால் அந்த வாய்ப்பை வழங்க SPSக்கு முடியாமல் போகும்.
விரிவுரைகள், கருத்தரங்கு, பிரத்தியேக போதனை, அப்பியாசங்கள், கள விஜயம், தனியான குழு வகுப்புகள் ஆகிய பல்வேறு நவீன முறைகளை பின்பற்றி நெறியின் கற்கைப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.