நூல் நிலையத்தின் அறிமுகம்

பொது நிர்வாகம், முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், கணக்கியல், சூழல் கல்வி ஆகியவை உள்ளிட்ட நவீன மற்றும் அதிகாரபூர்வ பிரசுரங்களின் பெரும் தொகுதி SLIDA நூல் நிலையத்தில் உள்ளது. அத்துடன் உள்ளுர் மற்றும் சர்வதேச பருவகால இதழ்களும் கிடைக்கின்றன. பயிற்சித் திட்டங்களில் பய்குபற்றுவோரும் நிறுவன அங்கத்தவர்களும் அவற்றை பயன்படுத்த முடியும்.

நூல் நிலையத்தின் புத்தகங்கள் சஞ்சிகைகளை இரவல் வழங்கும் மற்றும் உசாத்துணை, பிரிவுகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை 07.30 மணிமுதல் மாலை 07.30 மணிவரை திறந்திருக்கும். புட்டியல் வரிசை அட்டைகள் மற்றும் கணனி மயப்படுத்தப்பட்ட பெயர்ப்பட்டியல் வரிசை அட்டைகள் மற்றும் கணனி மயப்படுத்தப்பட்ட பெயர்ப்பட்டியல் ஆகியவையும் கிடைக்கும். இவை நூல்கள், சஞ்சிகைகளை தெரிவு செய்துகொள்ள வாசகர்களுக்கு உதவும். ஏனைய நூல் நிலையங்களுக்கிடையிலான தொடர்புபடும் சேவையை கேட்கும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்.